மகனின் தலை தீபாவளி கொண்டாடிய நெப்போலியன் - அமெரிக்காவில் சொத்து இவ்வளவா?
நடிகர் நெப்போலியன் மகன் தலைதீபாவளி கொண்டாடிய காணொளி தற்போது ரசிகர்களை ஈர்த்துள்ளது. இதில் நெப்போலியனுக்கு மெரிக்காவில் இருக்கும் சொத்து பற்றி இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றர்.
நெப்போலியன் மகன்
நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பானில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. எனவே இந்த ஆண்டு தனுஷ் மற்றும் அக்ஷயாவின் தலை தீபாவளியை லண்டனில் தடபுடலாக கொண்டாடி உள்ளனர்.
இந்த காணொளியை நெப்போலியன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 80 ஸ்களின் முன்னணி நடிகர்களின் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் நெப்போலியன்.
பின்னர் தன் மகனை பார்த்துக்கொள்வதற்காக அமெரிக்காவில் செட்டிலாகினார். அமெரிக்காவில், ஒரு ஐடி நிறுவனத்தை தொடங்கி, ரூ.1000 கோடி முதல் ரூ.1500 கோடி வரை சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார்.
மூத்த மகனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நெப்போலியன், தனது உறவுக்கார பெண்ணான அக்ஷயா என்பவரை திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணம் ஜப்பானில் தடபுடலாக நடந்தது.
திருமணமாகி பத்து மாதத்திற்கு பிறகு முதன் முறையாக புகுந்த வீட்டிற்கு அக்ஷயா வந்தார். தனது மருமகள் வீட்டிற்கு வந்ததை நடிகர் நெப்போலியன் ஊரையே கூட்டி தடபுடலாக வரவேற்றார்.
தற்போது தனுஷ்,அக்ஷயாவின் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருக்கும் வீடியோவை நெப்போலியன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தற்போது இணையவாசிகளை ஈர்த்துள்ளது. அதிலும் நெப்போலியன் அமெரிக்காவில் ஒரு ஐடி நிறுவனத்தை தொடங்கியுள்ளதும் அதன் சொத்து மதிப்பும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
