புதுமண தம்பதிகளை மறுத்த அமெரிக்கா சட்டம்.. நெப்போலியன் எடுத்த அதிரடி முடிவு
தனுஷ்- அக்ஷயா திருமணம் ஆறு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் நடக்கும் என நெப்போலியன் கூறியுள்ளார்.
நெப்போலியன் மகன் திருமணம்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த நடிகர் தான் நெப்போலியன்.
இவர், ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு தனுஷ், குணால் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் தனுஷுக்கு சிறு வயதிலேயே தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மகன் சிகிச்சைக்காக இந்தியாவிட்டு நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
அங்கு தனுஷுக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதால் அங்கு விவசாயம், ஐடி தொழில் என குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார்.
இந்த நிலையில் தனுஷுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் படி திருமணம் செய்ய நெப்போலியன் முடிவு செய்தார். அப்போது தான் ஜெயசுதாவின் வீட்டு பக்கத்தில் இருக்கும் அக்ஷயா குடும்பத்தினர் அறிமுகமாகியுள்ளனர்.
ஜப்பானில் திருமணம் செய்தது ஏன்?
இரு குடும்பத்தினரும் பேசி கடந்த 7ஆம் திகதி தனுஷ்- அக்ஷயா தம்பதிகளுக்கு ஜப்பானில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இவர்களின் திருமணத்தில் IS ராதிகா , சரத்குமார், குஷ்பு, மீனா, சுஹாசினி, கலா மாஸ்டர், கார்த்தி குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவை பொருத்தமட்டில் இருவருக்கும் உடல்நிலை சரியாக இருந்து குடும்பம் நடத்தும் அளவுக்கு இருந்தால் மட்டுமே திருமணம் நடத்த அனுமதி கிடைக்கும். இதனால் மகன் திருமணத்தை ஜப்பானில் நெப்போலியன் நடத்தியுள்ளார்.
6 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் திருமணம்
சுமார் 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். திருமணம் முடிந்தாலும் ஜப்பானிலேயே 6 மாதங்களுக்கு இருவரும் தங்குவார்கள்.
அதன் பிறகு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளனர்.
“ஜப்பானின் சட்ட திட்டங்கள் அமெரிக்காவுக்கு பொருந்தாது என்பதால் அந்த நாட்டு முறைப்படி தனுஷ் அக்ஷயாவுக்கு 6 மாதங்கள் கழித்து மீண்டும் திருமணம் செய்வார்கள்...” என நெப்போலியன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |