எங்க மகளை தப்பா பேசாதீங்க.. திருமணத்திற்கு பின் வருந்தும் நெப்போலியன் சம்மந்தி
நடிகர் நெப்போலியன் மருமகளின் பெற்றோர் அவரை பற்றி தவறான கருத்துக்களுக்கு இந்தியா வந்தவுடன் பதிலடிக் கொடுத்துள்ளனர்.
நெப்போலியன் மகன் திருமணம்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.
சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார். நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
இவருக்கு அக்ஷயா என்ற பெண்ணிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
எங்கள் மகளை தவறாக பேச வேண்டாம்..
இந்த நிலையில், தனுஷ்- அக்ஷயா திருமணம் குறித்து அக்ஷயாவின் பெற்றோர் பேசுகையில், “ என்னுடைய மகள் நன்றாக வாழ வேண்டும் என்று தான் அவரை அங்கு திருமணம் செய்து கொடுத்தோம்.
திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகி விட்டது. அவளை அங்கு விட்டுட்டு வரும் பொழுது கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவள் அங்கு சந்தோஷமாக இருப்பாள் என்ற நம்பிக்கை உள்ளது. அது போன்று என்னுடைய மகள் ரொம்பவும் துரு துருவென இருப்பவள். இனி எப்படி அமெரிக்காவில் இருக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.
எங்களுடைய மாப்பிள்ளை தனுஷ் என்னுடைய பெண்ணை நன்றாக பார்த்து கொள்வார். அதனால் தயவு செய்து யாரும் என்னுடைய பொண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள். அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்யுங்கள்..” என பெண்ணை திருமணம் செய்து கொடுத்த சந்தோஷத்தில் பேசியுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |