விக்னேஷ் சிவனை காதலித்த நினைவுகளை கூறிய நயன்தாரா! அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா அவரின் கணவர் விக்னேஷ் சிவனை காதலித்த நினைவுகளை தற்போது பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா காதல்
நடிகை நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தில் முதன்முறையாக தொழில் ரீதியாக இணைந்து பணியாற்றினார்கள்.
இதன் மூலம் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு 2022 ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். இதே ஆண்டில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகளான உயிர், உலகம் பிறந்தனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவனை காதலிக்க முன்னர் அவரை நயன்தாரா எப்படி பார்த்தார் எப்படி அவரை பிடித்தது என பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது “பாண்டிச்சேரி சாலைகளில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம், எனது படப்பிடிப்பிற்காக காத்திருந்தேன்.
விஜய் சேதுபதி சாருடன் ஒரு காட்சியைப் பற்றி விக்கி பேசுவதைப் பார்த்தேன்.அப்போது அவரை நான் பார்க்கும் போது அவர் எனக்கு வித்தியாசமாக தெரிந்தார். நான் அவரை வித்தியாசமாகப் பார்த்தேன், ”என்று நயன்தாரா கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |