மகனுக்காக வாரி இறைக்கும் நடிகர் நெப்போலியன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் பிறந்து அமெரிக்காவில் செட்டில் ஆன நடிகர் நெப்போலியன் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் நெப்போலியன்
இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் நெப்போலியன்.
இவர், “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் இருந்த காலப்பகுதியில் கதாநாயகராகவும் மட்டுமல்லாது முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பார்.
அதிலும் குறிப்பாக ரஜினிகாந்துக்கு வில்லனாக அவர் நடித்த “எஜமான்” திரைப்படம் நெப்போலியனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களில் கிராமத்து நயாகனாக நடித்திருந்தார்.

இதற்கிடையில், நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
தனுஷுக்கு அக்ஷ்யா என்ற பெண்ணுடன் கடந்த வருடம் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. தனுஷ்- அக்ஷயா திருமணம் முடிந்து சுமாராக 6 மாதங்கள் ஜப்பானில் வசித்து வந்தார்கள். அதன் பின்னர் தற்போது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்று விட்டனர்.

சொத்து மதிப்பு
இந்த நிலையில், நெப்போலியன் அமெரிக்காவில் ஐடி கம்பெனி ஒன்றை தொடங்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கிறார்களாம். அமெரிக்காவில் சொந்தமாக 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார்.
நெப்போலியனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரண்மனை போன்று வீடு உள்ளது. ராஜா போன்று வாழும் நெப்போலியன் வீட்டில் சினிமா தியேட்டர், நீச்சல் குளம், கூடைப்பந்து மைதானம் என சகல வசதிகளும் உள்ளன.

ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ. 1000 கோடிக்கு மேல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |