Nannari Sarbath: உடல் சூட்டை தணிக்கும் நன்னாரி சர்பத்- வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க இளநீர், மோர், பழச்சாறு என்ற இயற்கை பானங்களில் நன்னாரி சர்பத்துக்கும் நிச்சயம் இடமுண்டு.
நம் முன்னோர்கள் நன்னாரி வேர்களை தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்த தண்ணீரை பருகி வந்தனர்.
இது உடல்சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கும், பசியையும் தூண்டிவிடும்.
மிக முக்கியமாக உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி புத்துணர்ச்சி வழங்கக்கூடிய பானம் இதுவாகும்.
செரிமானத்தை சீர்ப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
வெயில் காலங்களில் நன்னாரி தொடர்ந்து எடுத்துக்கொண்டால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
நன்னாரி சிரப் எப்படி தயாரிப்பது?
நன்னாரி வேர் நாட்டுமருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும், இதை வாங்கிய பின்னர் மெதுவாக உடைத்து வேரின் வெள்ளை பகுதியை மட்டும் அகற்றி வைக்கவும்.
வேரின் வெளிப்பகுதி மட்டும் சர்பத் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனை நன்றாக நசுக்கி எடுத்துக்கொள்ளவும், தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து நன்னாரி வேர் துண்டுகளை போடவும்.
இந்த வேர் இரவு முழுவதும் நன்றாக ஊறவேண்டும், மறுநாள் காலையில் இதனுடன் சர்க்கரை சேர்க்கவும்.
இந்த சிரப்பை சூடாக்கி பாகு பதத்திற்கு வந்தவுடன் குளிரவிட்டு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
இதை பத்திரமாக சேகரித்துவைக்கவும், நன்னாரி சிரப் தயாராகிவிட்டது.
நன்னாரி சர்பத்
இந்த சிரப் 3 டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் கலக்கவும். தேவைப்படும் அளவுக்கு ஐஸ் கட்டிகள் சேர்த்து எலுமிச்சை சாறும் சேர்த்தால் சுவையான சர்பத் தயார்!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |