வெறும் 2 நிமிடங்களில் உடல் சூட்டை தணிக்கலாம்! என்ன செய்யணும் தெரியுமா?
தற்போது கோடைக்காலம் என்பதால் நமது உடல் அதிகளவான சூட்டைக் கொண்டிருக்கிறது. உடல் சூட்டினால் நாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டி வரும்.
உடல் சூடானது, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சினைகளை சரி செய்ய ஒரே ஒரு மூலிகை மட்டும் போதுமானது.
அதுதான் நன்னாரி. பெரு நன்னாரி, சிறு நன்னாரி என நன்னாரிச் செடி இரு வகைப்படும்.
நன்னாரிச் செடியானது இயற்கையாகவே குளிர்ச்சி தன்மையுடையது. உடல் சூடு தணிய, நன்னாரி இலைகளை அப்படியேவும் சாப்பிடலாம்.
அல்லது பத்து நன்னாரி இலைகளை சாப்பிட்டு தண்ணீர் அல்லது மோர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உடல் சூடு குறையும்.
நன்னாரின் வேரினை எடுத்து சிறிது சிறிதாக பொடியாக்கி, அதனை ஒரு வெள்ளை துணியில் கட்டி, ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அந்த பாத்திரத்தில் இந்த நன்னாரியைப் போட்டுவிட வேண்டும்.
image - trustherb
சிறிது நேரத்தின் பின்னர் அந்த தண்ணீரை எடுத்து குடித்தால் உடல் சூடு குறையும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உடல் சூடு குறைவதோடு, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், கடுப்பு என்பவற்றையும் குணப்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் நன்னாரி வேரில் பலவிதமான சர்பத்துக்களை செய்யலாம். அதாவது, நன்னாரி எலுமிச்சை சர்பத், நன்னாரி இளநீர் சர்பத், நன்னாரி நுங்கு சர்பத், நன்னாரி லெமன் சோடா என்பவை இதில் முக்கியமானவை.
சரி இனி நன்னாரி சர்பத் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
நன்னாரி வேர் - 50 கிராம்
கற்கண்டு - 200 கிராம்
லெமன் ஜூஸ் - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 3 கப்
செய்முறை
முதலில் நன்னாரி வேரை நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.
அதன் பின்னர் சுத்தமான துணியால் வேரை நன்றாக துடைத்து எடுக்க வேண்டும்.
நன்னாரி வேரை நறுக்கி ப்ரவுன் நிறத்துண்டுகள் வெள்ளை நிறத்துண்டுகள் என தனித்தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
இதில் ப்ரவுன் நிறப் பகுதியை மாத்திரமே பயன்படுத்தப் போகின்றோம்.
வேரை சிறு சிறு துண்டுகளாக இடித்துக்கொள்ள வேண்டும்.
அதன்பின்னர் 3 கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். தண்ணீரில் நுரை வந்தவுடன் அதில் நன்னாரி வேரை போட்டு கொதிக்கவிடவும்.
பின்னர் பாத்திரத்தை மூடி 6 மணிநேரம் அப்படியே வைக்க வேண்டும்.
அதன் பின்னர் சுத்தமான துணியால் ஜூஸை பிழிந்தெடுக்க வேண்டும்.
பின்னர் கற்கண்டை ஜூஸூடன் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
அடுப்பை அணைத்து லெமன் ஜூஸை அதனுடன் கலந்து கொள்ளவும்.
3 தேக்கரண்டி நன்னாரி ஜூஸை குளிர்ந்த நீருடன் கலக்கி வைக்கவும்.
அருமையான, ஆரோக்கியமான நன்னாரி சர்பத் தயார்.