விஜய்க்கு ஆதரவாக நாஞ்சில் விஜயன் வெளியிட்ட காணொளி: கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், விஜய் -த்ரிஷா தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக ஒரே நிற ஆடை அணிந்து, ஒரே காரில் வந்த காணொளி குறித்து விஜய்க்கு ஆதரவாக பேசி தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நாஞ்சில் விஜயன்
நாகர்கோவிலைச் சேர்ந்த நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் புகழ் பெற்றார்.

குறிப்பாக அது இது எது, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் தனது காமெடியான உடல்மொழியால் பலரை சிரிக்க வைத்தவர்.

நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணமாகி 2 இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த தம்பதியினருக்கு அண்மையில் தான் குழந்தை பிறந்தது.

அண்மையில் திருநங்கையை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கியதால் நாஞ்சில் விஜயன் பற்றிய விடயங்கள் இணையத்தில் பேசு பொருளாக மாறியதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் - த்ரிஷா ஜோடியாக ஒரே நிற ஆடை அணிந்து, ஒரே காரில் வந்த காணொளி குறித்து நாஞ்சில் விஜயன் விஜய்க்கு ஆதரவாக பேசி தற்போது காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளி வைரலாகி வருவதுடன் நெட்டிசன்கள் பலரும் நாஞ்சில் விஜயனை தாறுமாறாக கலாய்த்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |