நான் அப்படி பண்ணல.. மனைவியை ஆதாரமாக நிறுத்திய நாஞ்சில் விஜயன்- நடந்தது என்ன?
“நான் அவுங்கள காதலிக்கவில்லை..” என சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் திருநங்கை புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
நாஞ்சில் விஜயன்
பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிய “அது இது எது?” என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன்.
இவர், எந்த கெட் அப் கொடுத்தாலும் அதில் தன் 100 சதவீத உழைப்பை கொடுப்பது தான் நாஞ்சில் விஜயனை பிரபலமாக்கியுள்ளது. “அது இது எது” நிகழ்ச்சியில் அதிகப்படியாக லேடி கெட் அப் போட்டு வந்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பது தான் இவரின் வேலை. இதனால் தான் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கிடையில், நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பின்னர் நாஞ்சில் விஜயனும் அவரது மனைவியும் சமூக வலைத்தளங்களில் தம்பதிகளாக பிரபலமாவது வழக்கமாக கொண்டிருந்தார். அவர்களின் ரீல்ஸ் காணொளியை பார்ப்பதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
பாலியல் புகார் கொடுத்த காதலி
இந்த நிலையில், நாஞ்சில் விஜயனுக்கும் அவரது மனைவி மரியாவுக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மகள் பிறந்ததும் நாஞ்சில் விஜயன் கண்ணீருடன் அவரை கையில் ஏந்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து, நாஞ்சில் விஜயன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் திருநங்கை ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டார் என பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
நா காதலிக்கவில்லை..
இது குறித்து நாஞ்சில் விஜயன் பேசுகையில், “நானும் அந்த பொண்ணும் சாதாரண நண்பர்கள் தான். எங்களுக்குள் இருப்பது தவறான தொடர்பு அல்ல. என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இந்த கருத்துக்களை பகிர்வதை நிறுத்துங்கள்.” என மனைவியுடன் சேர்ந்து காணொளி வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        