Ethirneechal: துப்பாக்கியால் சுட்ட பொலிஸ்... உயிருக்கு போராடும் ஜீவானந்தம்
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியை ஜீவானந்தம் அழைத்து கொண்டு செல்லும் போது நெஞ்சில் குண்டடிபட்டதால் உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார்.
எதிர்நீச்சல்
பிரச்சனை மேல் பிரச்சனை ஒரு குடும்பத்தில் வருமா என சந்தேகப்படுபவர்களுக்கு இந்த எதிர்நீச்சல் சீரியல் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். வீட்டிற்கு வாழ வந்த மருமகள்களின் நீதி போராட்டம் தான் இந்த சீரியல்.
தற்போதைய எபிசோட்டில் ஒரு பக்கம் தர்ஷன் அன்புக்கரசி திருமணத்தை குணசேகரன் அறிவுக்கரசி சேர்ந்து பிடிவாதமாக நடத்தி வைக்க நினைக்கின்றனர்.
இன்னுமொரு பக்கம் பார்கவியை எப்படியாவது ஜனனியிடம் சேர்க்க வேண்டும் என்று தன் உயிரையே தியாகம் செய்ய துணிகிறார் ஜீவானந்தம்.
இப்படி இருக்க தற்போது அடுத்த எபிசோட்டிற்கான ப்ரொமோ வெளியாகி இருக்கின்றது.
உயிருக்கு போராடும் ஜீவானந்தம்
பார்கவியை தர்ஷனுக்கு திருமணம் செய்து வைப்பது தான் ஈஸ்வரியின் ஆசை என்பதற்காக எப்படியாவது பார்கவியை ஜனனியிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஜீவானந்தம் காட்டு வழியாக தப்பித்து செல்கிறார்.
இந்த நேரம் பார்த்து பொலீஸ் கும்பல் அவரை சுட்டு விடுகின்றனர்.
நெஞ்சில் புல்லட் பட்டதால் ஜீவானந்தம் தற்போது உயிருக்கு போராடும் நிலையில் இருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |