நடிகை நமீதாவின் இரட்டை குழந்தைகளை பார்த்ததுண்டா? வெளியிட்ட முதல் புகைப்படம்
நடிகை நமீதா தனது இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், புகைப்படத்தினை தனத இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றார்.
நடிகை நமீதா
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நமீதா, பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வலம் வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிக்பாஸிலும் கலந்து கொண்டு வலம் வந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதாவிற்கு கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது.. குறித்த குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என்று பெயர் வைத்துள்ளார்.
இந்நிலையில் நமீதா குழந்தைகளின் தனது குழந்தைகளின் முதல் பிறந்தநாளை கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இரண்டு குழந்தைகளால் தான் தங்களது வாழ்வு பிரகாசமாகவும், ஒளிமயமாக இருப்பதாகவும். தற்போது எங்களது குழந்தைகள் ஒரு வயதை பூர்த்தி செய்வதாகவும், தனது இதயம் மற்றும் இதயத் துடிப்புக்கு காரணமான கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் ஐ லவ் யூ கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
You May Like This Video