மூக்கிற்கும் உதடுகளுக்கும் இடையில் உள்ள பகுதிக்கு என்ன பெயர்னு தெரியுமா?
பொதுவாகவே நமது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் என்னென்ன பெயர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
ஆனால் வாய்க்கும் மூக்குக்கும் நடுவில் இருக்கும் சிறிய பகுதிக்கு என்ன பெயர் என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
இதனை பெரும்பாலானவர்கள் உதட்டின் மேல் பகுதி என்றே அழைக்கின்றனர். உடலில் எல்லா பாங்களுக்கும் பெயர் இருக்கும் பட்சத்தில் இந்த பகுதிக்கும் பெயர் இருக்கத்தானே வேண்டும்.என்ன பெயர் ?
பொதுவாக இதுபோன்ற வார்த்தைகளின் பயன்பாடு அதிகமாக பயன்படுத்தபடாவிட்டாலும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் மனித முகத்தில் உள்ள ஒரு பகுதியின் பெயர் என்ன என்ற கேள்வி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பகுதிக்கும் பெயர் ஃபில்ட்ரம். மூக்கிற்கும், உதடுகளுக்கும் இடையே இருக்கும் பகுதியை இது குறிப்பிடுகிறது. இது ஒரு ஆங்கில சொல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபில்ட்ரம் என்றால் என்ன?
ஃபில்ட்ரம் என்பது மூக்கின் அடிப்பகுதியில் இருந்து உதட்டின் மேல் வரை செல்லும் ஒரு மையப் பள்ளம். இந்த இடத்தின் நடுவில் பள்ளம் உள்ளது.
தற்காலத்தில் இந்த பகுதியில் நகைகள் அணிவது ட்ரெண்டிங்கில் இருப்பதால் இது குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் அணியும் நகைகள் ஃபில்ட்ரம் நகைகள் என அழைக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |