இலங்கை நல்லூர் கந்தனின் ஆறாம் நாள் சிறப்பு பூஜை (Live)
இலங்கையில் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு நிறைந்த ஆலயம் தான் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்.
இந்த ஆலயம் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு இலங்கையர்கள் மட்டுமல்ல வேறு நாட்டவர்களும் கூட வந்து கந்தனின் அருளைப் பெற்றுச் செல்வார்கள்.
இந்நிலையில், கடந்த (21.08.2023) நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி தீர்த்த திருவிழாவுடன் 25 நாட்களுக்கு தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நல்லூரானின் மகோற்சவ பெருவிழா நடந்துக் கொண்டிருக்கின்ற வேளையில், இன்றைய தினமான (26.08.2023) ஆறாம் நாளான இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுவதை நேரலையில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |