குட்டி மகனின் படத்தை பகிர்ந்த நடிகர் நகுல்! என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா?
பிரபல நடிகரும், நடிகை தேவயானியின் தம்பியுமான நகுல் தன்னுடைய செல்ல மகனின் அழகாக வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பாய்ஸ் படத்தில் அறிமுகம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நகுல், அந்த படத்தில் கொழு கொழுவென குண்டு பையனாக தோற்றமளித்த நகுல், பின்னர் உடல் எடையை குறைத்தார்.
தொடர்ந்து நாயகனாக காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்து போன்ற படங்களில் நடித்தார்.
இன்னும் இரண்டு படங்கள் வெளியீட்டிற்கு தயாராகவுள்ள நிலையில், பிரபல தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியிலும் நடுவராக அசத்தி வந்தார்.

மகனின் க்யூட் வீடியோ
இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2020 ஆகஸ்ட் மாதம் அகிரா என்ற மகள் பிறந்தார், மகளின் சேட்டைகளை அவ்வப்போது இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிட்டு வந்த நகுல்- ஸ்ருதி தம்பதியினருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தையையும் வாட்டர் பெர்த் மூலமே பெற்றெடுத்தார் ஸ்ருதி, இதனை அவர்களே இன்ஸ்டாவிலும் வெளியிட்டனர்.
இந்நிலையில் செல்ல மகனுக்கு “அமோர்” என பெயர்சூட்டியுள்ளனர், இத்தாலி மொழியில் இந்த பெயருக்கு காதல், அன்பு என்று அர்த்தமாம்.