ஹனிமூன் சென்ற இடத்தில் கணவர் பட்ட அவஸ்தை! நடிகை நக்ஷ்த்ரா ஓபன் டாக்
பிரபல சீரியல் நடிகை நக்ஷத்ரா தனது அவசர திருமணத்திற்கு காரணத்தை கூறியிருந்த நிலையில், தற்போது தனது ஹனிமூனில் நடந்த சுவாரசியத்தையும் கூறியுள்ளார்.
நடிகை நக்ஷத்ரா
தமிழில் கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'கிடா பூசாரி மகுடி' படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நக்ஷத்ரா குட்டிசேரி.
இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தார்.
மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற இந்த சீரியல் முடிந்தவுடன் இவர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். ஆம் 'கிடா பூசாரி மகுடி' படத்தில் கதாநாயகனாக நடித்த ராம்தேவ் என்பவரை தான் திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் திருமணம் எதிர்பாராத சூழ்நிலையில் திடீரென நடைபெற்றுள்ளது. இதற்கான காரணம் பலருக்கும் தெரியாத நிலையில், இவர்களைப் பற்றி வதந்தி அதிகமாகவே பரவியது.
திடீர் திருமணம் எதற்காக?
குறிப்பாக மறைந்த சின்னத்திரை சித்ராவின் வாழ்க்கை போன்று நக்ஷத்ரா வாழ்க்கை அமைந்துள்ளதாக அவருடன் நடித்த பிரபல நடிகை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நக்ஷத்ரா தனது அவசர திருமணத்திற்கு காரணம் என்ன என்பதை தனது கணவருடன் தற்போது நேர்கானல் ஒன்றில் சமீபத்தில் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஹனிமூன் சென்ற இடத்தில் நடந்த சுவாசியம், தனது கர்ப்பமான தருணம் என அனைத்து விடயங்களையும் பகிர்ந்துள்ளார்.