பிரபல டிவியில் மீண்டும் சீரியல் நடிகராக களமிறங்கும் தீபக்! அடுத்தடுத்து திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ
தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னோடியாக இருந்து வரும் ஸ்டார் விஜய் சேனலில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, ராஜா ராணி போன்ற வெற்றித்தொடர்களின் வரிசையில், ‘தமிழும் சரஸ்வதியும்’ என்கிற புதிய தொடர் உதயமாகியுள்ளது.
இந்த தமிழும் சரஸ்வதியும் தொடரில் தமிழாக தீபக் நடிக்கிறார்.
தீபக், ஸ்டார் விஜய் சேனலின் செல்லப்பிள்ளைதான். மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பியுள்ளார்.
ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக சேனலுடன் மிக நீண்ட கால உறவைக் கொண்டிருந்தார்.
முன்னணி சீரியல்களிலும் அவர் பல பாத்திரங்களைச் செய்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் நடிகராக களமிறங்கியுள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தமிழும் சரஸ்வதியும் - ஜூலை 12 முதல் திங்கள் - வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #ThamizhumSaraswathiyum #VijayTelevision pic.twitter.com/BozOKs3vAb
— Vijay Television (@vijaytelevision) July 5, 2021