நகங்கள் உடையுதேனு கவலையா??
கைகளுக்கு ஒரு வித அழகைக் கொடுப்பதில் நகங்களுக்கு பெரிய பங்குண்டு.
நகங்களை நீளமாக வளர்த்து பிடித்த வண்ணங்களில் நகப்பூச்சு பூசுவதென்றால் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆசை ஆசையாக பார்த்து வளர்த்த நகம் திடீரென உடைந்து போகும்போது மனமும் சேர்ந்து உடைந்து போவதென்பது என்னமோ உண்மைதான்.
சில பெண்களுக்கு வீட்டில் சின்ன வேலை செய்தால்கூட நகங்கள் உடைந்து போய்விடும். அதற்கு போதியளவு ஊட்டச்சத்து இல்லாதது கூட காரணமாக இருக்கலாம். இவ்வாறு நகங்கள் உடையாமலிருக்க இந்த குறிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாதாம் எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
ஏதாவது வாசனை எண்ணெய் - சில துளிகள்
எவ்வாறு பயன்படுத்துவது?
பாதாம் எண்ணெயை சூடாக்கி, சிறிதளவு எலுமிச்சை சாறை விட்டு, பின் வாசனை எண்ணெயை கலந்து பஞ்சினால் நகத்தில் தேய்க்க வேண்டும்.
கிழமையில் 3 தினங்கள் இதை செய்து வரவும். சிறந்த பலனைக் காணலாம்.