இன்று நாக பஞ்சமி... பாம்பிற்கு பால் ஊற்றி வணங்காதீங்க
நாக பஞ்சமி நாளான இன்று பாம்பிற்கு பால் கொடுக்கலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாக பஞ்சமி 2024 இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதியான இன்று நடைபெறுகின்றது. இந்நாளில் உயிருள்ள நாகத்தை வணங்குவது முற்றிலும் தவறு என்று கூறப்படுகின்றது. ஏன் இவ்வாறு கூறுகின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஏன் வணங்கக்கூடாது?
பாம்பு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கூறுகையில், பூஜையின் போது பாம்பின் மீது மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களை வைப்பதால் அதன் உடல்நலம் பாதிக்கப்படுமாம்.
உயிருள்ள நாகத்திற்கு தவறுதலாக கூட பால் கொடுக்கக்கூடாது. ஏனெனில், இது ஒரு ஊன் உண்ணி ஆகும். பால் அவற்றின் மரணத்திற்கு காரணமாக அமைகின்றது.
பாம்புகளை வணங்க விரும்பினால், அவற்றின் சிலைகளை வணங்குங்கள். உயிருள்ள பாம்புகளை வணங்குவதும், பால் கொடுப்பதும் ஒரு வகையான கொடுமை ஆகும்.
பாம்புகள் நமது சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகவும் அவசியமாகும். அவைகள் இல்லையென்றால், சுற்றுச்சூழல் அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டு, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் அமைப்பில் பாம்புகளின் முக்கியத்துவத்தை அறிந்ததால் தான், நாக பஞ்சமி பண்டிகையைக் கொண்டாடும் மரபை உருவாக்கினர். இது நாகங்களுக்கு நன்று சொல்லும் நாளாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |