மழையில் நனைந்தபடி குஞ்சுகளை பாதுகாக்கும் தாய் கழுகு! நெகிழ்ச்சியான காட்சி
தான் நனைந்தாலும் பராவாயில்லை தன் குஞ்சுகளை மழையில் நனையவிடக்கூடாது என பாதுகாக்கும் தாய் கழுகின் தியாகத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பறவை இனங்களில் கழுகுக்கு ஒரு முக்கியமான இடம் காணப்படுகின்றது. அவை வாழும் விதம், பிரச்னைகளைக் கையாளும் முறை, பழக்கவழக்கங்கள் எனச் சிறந்த பண்புகளைக் கழுகுகள் கொண்ருக்கின்றன.
இதனால் மனிதனின் வாழ்க்கைக்கு இது ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. அதனால்தான் மனிதன் கழுகை ஒரு பறவை இனமாக மட்டும் கருதாமல் தங்கள் வாழ்விற்கு ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொள்கிறான்.
ஆனால் தாய்மையின் குணங்கள் மனித இனத்துக்கு மட்டுமன்றி உலகில் அனைத்து பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் பொதுவாகதாகவே இருக்கின்றது. தாயின் பாசம் எப்போதும் உயர்ந்தது தான்.
தாய் பாசத்துக்கு ஈடு இணையாக இந்த உலகில் வேறு எதையும் குறிப்பிடவே முடியாது காரணம் தாயின் பாசத்தில் எந்த எதிர்பார்ப்பும் சுய நலடும் துளியளவும் இருப்பதில்லை. தன்னை வருத்திக்கொண்டு தன் பிள்ளைக்கு நல்லது செய்ய தாயால் மட்டுமே முடியும். அதனை மீண்டும் ஒரு முறை பறைசாற்றியுள்ளது இந்த காணொளி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |