மாமியார் வீட்டு சீதனமோ? பைக்கில் ஜாலியா ரைடு போகும் நாக சைதன்யா- விமர்சிக்கும் ரசிகர்கள்
நடிகர் நாக சைதன்யா விலை உயர்ந்த பைக் ஒன்றில் தமிழக சாலையில் வலம் வரும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
திருமணம்
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்த இருவரும் சில வருடங்களுக்கு முன்னர் அவர்களின் விவாகரத்து செய்தியை அறிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக மீண்டும் நாக சைதன்யா அறிவித்திருந்தார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் பெரியவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
சாலையில் செய்த செயல்
கடந்த சில நாட்களாக ஹனிமூனில் இருந்த நாக சைதன்யா தற்போது படங்களில் பிஸியாக ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், நாக சைதன்யா பிஎம்டபிள்யூ மோட்டாராட் (BMW Motorrad) நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பைக்கை தலைகவசம் இல்லாமல் ரோட்டில் ஓட்டிச் சென்றுள்ளார்.
குறித்த பைக்கை அவர் வாங்கிவிட்டாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ எந்தவொரு வார்த்தைகளும் வெளியாகவில்லை.
மோட்டாராட் (BMW Motorrad)
அதே சமயம், நாக சைதன்யா ஓட்டி வந்த அந்த பைக்கில் நிரந்தர பதிவெண்ணிற்கு பதிலாக, டிசி (Trade Certificate) நம்பர் பிளேட்டே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆன போதிலும் இது நாக சைதன்யாவால் சொந்தமாக்கப்பட்ட வாகனம்தானா என்பது துள்ளியமாக தெரியவில்லை.
அத்துடன் நாக சைதன்யா குறித்த பைக்கை வாங்குவதற்காக கூட சென்னை நகர சாலையில் வலம் வந்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
குறித்த பைக், ஆர் 1250 ஜிஎஸ் (R 1250 GS) எனும் மாடல். இது ஓர் அட்வென்சர் (Adventure) வகை பைக் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த பைக் ரூ. 20.55 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இந்த பைக்கில் அதிக பவர்ஃபுல்லான மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது என்பதும் தெரியவந்துள்ளது.1,250 சிசி திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தியுள்ளனர்.
இந்த மோட்டார் வாகனம் அதிகபட்சமாக 136 எச்பி பவரை 7,750 ஆர்பிஎம்மிலும், 143 என்எம் டார்க்கை 6,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |