திருமணம் முடிந்த உடனேயே விசேஷமா? நாக சைதன்யா - சோபிதா எங்கு சென்றுள்ளார்கள் தெரியுமா?
சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும், திருமணம் முடிந்த பின்னர் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சோபிதா துலிபாலா- நாக சைதன்யா
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் சமந்தா சினிமாவில் பிசியாக இருந்தார்.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021இல் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையில் நடிகை சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யாவுக்கு இடையில் இருந்த நட்பு காதலாக மாறியது.அதன் பின்னர் இவர் தொடர்பான பல விடயங்கள் இணையத்தில் வைரலானது.
சர்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு முறையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். தற்போது ஐஸ்லாந்துக்கு ஹனிமூனில் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் திருமணத்தின் பின்னர் இவர்கள் இணைந்து கலந்துக்கொள்ளும் முதல் விஷேசம் பிரபல இயக்குனரான அனுராக் காஷ்யப்பின் மகளான ஆலியா காஷ்யப் - ஷேன் கிரிகோயர் திருமண நிகழ்ச்சி தான்.
இவர்கள் திருமணம் முடிந்து ஒன்றாக பங்குபெறும் முதல் நிகழ்ச்சி இது என்பதால், குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |