கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க
கோவாவில் நடந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் தொழிலதிபர் ஆண்டனி தட்டில் திருமணத்தில் தளபதி விஜய் மிக உயரிய விருந்தினர்களில் ஒருவராக கலந்துக்கொண்டுள்ளார்.
குறித்த திருமணத்தில் வேட்டி சட்டி சட்டை அணிந்து அழகிய தழிழ் மகனாக தளபதி விஜய் கலந்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ் திருமணம்
இன்று தனது 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை இன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்தின் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமுக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
திருமணத்தில் தளபதி விஜய்
கீர்த்தி சுரேஷ் மற்றும் தொழிலதிபர் ஆண்டனி தட்டில் ஆகியோரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தளபதி விஜய் இன்று கோவா சென்றுள்ளார்.
விஜய்யும் கீர்த்தியும் இணைந்து பைரவா மற்றும் சர்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்த இரண்டு திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் கொடுத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தறி்போது தனது அரசியல் முயற்சிகள் மற்றும் இயக்குனர் எச் வினோத்துடன் தனது அடுத்த படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய், கீர்த்தியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது வேலை அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கினார்.
இந்த நிலையில், கோவாவில் நடக்கும் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணத்தில் நடிகர் தளபதி விஜய் கலந்துகொண்டுள்ள புகைப்பம் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |