வருங்காலத்தை கணிக்கும் நாடி ஜோதிடம்... தற்போது நடப்பவை எல்லாம் முன்னதாக கணிக்கப்பட்டவையா?
நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற நல்ல விடயங்கள் காலம் மாற மாற கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துக் கொண்டு வந்தாலும், அவற்றை இன்னும் சிலர் முறையாக பின்பற்றி வருகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒன்றுதான் இந்த ஜோதிடம். ஜோதிடம் பற்றி பலருக்கும் பலவகையான எண்ணங்களும் நம்பிக்கையும் இருக்கும். அப்படி ஜோதிடம் பார்க்கும் முறையில் ஓலைச் சுவடியில் ஜாதகம் பார்க்கும் முறையை ஒன்றையும் பின்பற்றி இருக்கிறார்கள்.
இந்த ஓலைச் சுவடியை கி. மு 5ஆம் நூற்றாண்டு காலத்திலிருந்து கிட்டத்தட்ட கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை எழுதப்படும் பொருளாக பயன்படுத்தியிருப்பதாகவும் நாம் கேள்வி பட்டிருக்கிறோம் அப்படி பயன்படுத்திய பொருட்களை வைத்து இலங்கையில் ஜோதிடம் சொல்லி வருகிறார் நாடி ஜோதிடர் ஜெய்சங்கர்.
இது பற்றிய முழுமையான தகவல்களை அறிந்துக் கொள்ளுங்கள் எமது பயணம் நிகழ்ச்சியில்,