நாதஸ்வரம் மகாவ ஞாபகம் இருக்கா? இப்ப எப்படியிருக்காங்க தெரியுமா?
'நாதஸ்வரம்' தொடரில் 'மகா' என்கிற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை கீதாஞ்சலி.
காரைக்குடியை பூர்வீகமாக கொண்டவர் கீதாஞ்சலி, நாதஸ்வரம் சீரியலும் அங்கேயே தான் எடுக்கப்பட்டது.
முதல் சீரியலிலேயே அசாத்திய நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் ரஜினிகாந்த்?
திடீர் திருமணம்
இதனை தொடர்ந்து 'கல்யாண வீடு', 'வாணி ராணி', 'ராஜா ராணி' எனத் தொடர்ந்து நடித்து வந்தார்.
சீரியல்கள் முடிவடைந்த நிலையில், சொந்த ஊருக்கு திரும்பினார், இந்நிலையில் கடந்தாண்டு இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த கீர்த்தி ராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
கீர்த்தி ராஜ் இன்ஜினீயரிங் முடித்து விட்டு துபாயில் பணியாற்றி வந்தார்.

துபாயில் கீதாஞ்சலி
திருமணமான கையோடு சீரியலுக்கு முழுக்குபோட்டுவிட்டு , துபாயில் செட்டிலாகியுள்ளார் கீதாஞ்சலி.
இவரது தங்கை மலையாள சீரியலில் நடித்து வருவதாகவும், தங்கையே குடும்பத்தை பார்த்துக் கொள்வதால் கொஞ்ச நாள் பிரேக் எடுத்துள்ளாராம்.
நடிக்கக்கூடாது என கணவர் தடை விதிக்காததால், விரைவில் மீண்டும் நடிக்கத் தொடங்கிவிடுவேன் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
மேலும் தனக்கு கதைகள் எழுதப்பிடிக்கும் என்பதால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதை எழுதி வருவதாகவும், விரைவில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவி மீது தாடி பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டு