நடிகை அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா? வைரலாகும் ஒற்றை புகைப்படம்
நடிகை அபிநயா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கையில் நிச்சயதார்த்த மோதிரத்துடன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அபிநயா
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அபிநயா.
அதனை தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் மூக்குத்தியம்மன் 2 திரைப்படத்திலும் அபிநயா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
காது கேட்காமல், வாயும் பேசமுடியாமல் சைகை மொழியால் கதைகளை உள்வாங்கி கடந்த 15 வருடங்களாக சினிமாவில் தனித்த அடையாளத்தை பெற்று எல்லோருக்கும் பிடித்த நடிகையாக வெற்றி நடை போட்டு வருகிறார்.
திரைத்துறைக்கு வந்து இத்தனை ஆண்டுகளை கடந்து கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்த அவர் அண்மையில் தன் காதல் குறித்து மனம் திறந்து பேசினார். இதில், விஷால் குறித்த வதந்தி செய்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. மோதிரம் மாற்றிய பிறகு கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து தனது சமூக வரைலத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படம் இணையத்தில் வாழ்த்துக்களையும், லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |