Exercises பற்றிய கண்மூடித்தனமான கட்டுக்கதைகள்- விஞ்ஞானம் தரும் விளக்கம்
பொதுவாக மனிதர்கள் தங்களின் உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் உடற்பயிற்சி செய்வார்கள்.
இதன்போது உடற்பயிற்சி தொடர்பிலான கட்டுக்கதைகள் கேள்விபட்டிருப்போம்.
அவைகளை நம்பி வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகள் மற்றும் டயட்களை மாற்றியிருப்போம்.
அத்தகைய கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றிற்கு விஞ்ஞானம் என்ன கூறுகின்றது பற்றியும் தொடர்ந்து பதிவில் பார்ப்போம்.
கட்டுக்கதைகள் - 1
1. வயிற்றுப்பகுதியில் தசை இல்லாமல் Slim ஆக காட்சி அளிப்பதற்கு 'கிரெஞ்சஸ்” செய்ய வேண்டும்.
உண்மை
தரையில் படுத்தபடி கை, கால்களை வளைத்து “Grenches” பயிற்சி செய்வதால் வயிற்றுப்பகுதி Slim ஆகாது. மாறாக உணவுப்பழக்கம் மற்றும் அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனால் மாத்திரமே வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைக்க முடியும்.
கட்டுக்கதை - 2
உடற்பயிற்சியின் போது வியர்வை அதிகம் வெளியேறினால் உடலிலுள்ள கொழுப்பு குறையும்.
உண்மை
வியர்வை என்பது கலோரி எரிக்கப்படுவதால் வெளியேறும். இதனை உடற்பயிற்சி, கஷ்டமான வேலைகள் செய்தல், சூரியக்கதிர் வீச்சுகள் அதிகமாக இருத்தால் இப்படியான நேரங்களில் வெளியேறும். அதிகமாக வியர்வை வெளியேறுதல் உடலை குளிர வைக்க மாத்திரமே. கொழுப்பிற்கு வியர்வைக்கும் சம்பந்தம் கிடையாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |