உயிர்களை கல்லாய் மாற்றும் செந்நிற மர்ம ஏரி: நீங்கள் அறியாத உண்மைகளுடன்
ஆப்பிரிக்க கண்டத்தில் பார்ப்பதற்கு அசல் இரத்த ஆறு போல பிரசித்திப் பெற்ற ஏரியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஞ்ஞான விளக்கம்
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள தான்சானியா என்ற பகுதியின் நகராகோரோ எனும் மாகாணத்தில் இந்த செந்நிற ஏரி அமைந்துள்ளது. இந்த ஆறு இவ்வாறு காணப்படுவதற்கு சில விஞ்ஞான ரீதியிலான உண்மைகள் இருக்கிறது.
இதன்படி, இந்த ஏரியின் பெயர் நாட்ரான் ஏரி, தொடர்ந்து ஏரியிலுள்ள நீர் ஆல்கலைன் நீர் 10.5 பி.ஹெச் (PH) அளவைக் கொண்டுள்ளது.
ஏரிக்கு அருகிலுள்ள எரிமலையிலிருந்து வெளியேறும் சோடியம் கார்பனேட் மற்றும் பிற தாதுக்களால் ஏரியிலுள்ள அல்கலைன் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக தான் ஏரி சிவப்பு நிறத்தில் பார்ப்பவர்களை வியப்பூட்டும் வகையில் காணப்படுகிறது.
image - (Foto: Flickr/SearchOfLife Blog)
ஏரியின் சிறப்பம்சம்
இந்த ஏரியில் இருக்கும் நீரை அருந்தினால் உடனடியாக மரணம் ஏற்படும் மற்றும் இதிலுள்ள இரசாயன பதார்த்தம் உடலை பதப்படுத்தியதுப்போன்று சிலையாக மாற்றும்.
இதனால் இதன் பாவனையை அந்நாட்டு அரசாங்கம் முற்றாக தடை செய்துள்ளது. இதிலுள்ள இறந்த மிருகங்களின் உடல்களை 'மம்மிஃபிகேஷன்' எனும் பெயரால் அழைப்பர்.
கோடைகாலங்களில் இந்த ஏரி 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.