சூயிங் கம் சாப்பிட்டால் டென்ஷன் குறையுமா? ஆய்வுகள் கூறும் உண்மை
சூயிங் கம் சாப்பிடுவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.இதனை பெரும்பாலானோர் ஒரு தவறான செயல் எனவே கருதுகின்றார்கள். ஆனால் இதில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பலவிமதமான நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.
சூயிங் கம் சாப்பிடுவதால், நமது இரத்ததில் இன்சுலின் கலக்கும் விகிதம் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போதைய ஆய்வுகள் இதனை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்திருக்கின்றன.
பொதுவாகவே நாம் புதிதாக ஒரு வேலையை செய்யப்போகின்றோம் என்றாலோ முதல் மறையாக ஒரு நபரை சந்திக்க போகின்றோம் என்றாளோ உளவியல் ரீதியாக ஒரு பதட்டம் இருப்பது இயல்பானதே இவ்வாறான நேரங்களில் சூயிங் கம் சாப்பிடுவதன் மூலம் பதட்டத்தை போக்க முடியும்.
ஹார்மோன்கள் கட்டுப்படுத்த உதவும்
சூயிங் கம் சாப்பிடும் போது பதட்டத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப் படுகின்றமையால் உளவியல் ரிதியாக ஒரு ரிலாக்ஸ் கிடைக்கின்றது.
இதனால் நாம் எந்த வேலையையும் சுலபமாக செய்து முடிக்க முடியும் என அமெரிக்க ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் சூயிங் கம் சாப்பிவதனால் உடல் எடையையும் குறைக்க முடியும்.ஆமாங்க பசியை கட்டுப்படுத்த கூடிய தன்மை சூயிங் கம் சாப்பிடுவதன் மூலம் உருவாகின்றது.
மேலும் இதனால் அதிக கலோரிகளை எரிக்க முடிகின்றது. சூயிங் கம்மை வாயால் மென்னும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் இன்சுலினை முறையாக உடைக்க நமது செரிமான மண்டலத்திற்கு உதவியாக இருக்கிறது.
நாம் சாப்பிடும் இன்சுலின் மாத்திரைகளை நமது செரிமான மண்டலம்தான் உடைத்து முறையே ரத்திற்கு அனுப்புகிறது. நமது குடல் எளிதாக எந்த ஒரு என்சைம் இரத்தில் கலந்துவிட அனுமதிக்காது.
குடலில் இருக்கும் சில சூழலால் உடலுக்கு தேவையான மற்றும் தேவையற்ற விஷயங்களை அது ரத்தில் சேர்வதற்கு அனுமதிக்காது.
முக தசைகளுக்கு ஆரோக்கியம்
அப்போது உடல் இதை சரி செய்துகொள்ள சில விஷயங்களை செய்கிறது. உதாரணமாக பி12 என்ற சத்து நமது வாயில் உள்ள எச்சிலில் கலந்துவிடும்.
ஹாப்டோகோரின் என்ற புரோட்டின் நமது எச்சலில் பி12 கலக்க உதவினாலும். வயிற்றில் இது கலந்துவிடாமல் தடுக்கிறது. இதுவே நமது குடலுக்கு செல்லும்போது, பி12 இரத்ததில் கலந்துவிடுகிறது.
இதுபோல் இன்சுலின் நமது இரத்தில் கலந்துவிட,சூயிங் கம் சாப்பிடுவது உதவுகிறது. நாம் சூயிங் கம் மெல்லும்போது உருவாகும் புரோட்டின், இன்சுலினை ரத்தில் கலக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் சூயிங் கம் சாப்பிடுவது முக தசைகளுக்கு ஒரு பயிற்சியாக இருப்பதனால் முகசுருக்கங்களை தவிர்க்கவும் இது உதவியாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |