இந்த செடிகள் வீட்டில் இருக்கா? இவை பாம்புகளை ஈர்க்கும் ஜாக்கிரதை!
பொதுவாகவே பாம்புகள் என்றால் அனைவருக்கும் இனம் புரியாத பயம் இருக்கும். பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று பழமொழி கூட இருக்கின்றது.
பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. அனைவரும் பயப்படுவதற்கு காரணம் அதன் விஷம் தான்.
இப்படி மிகவும் ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு குளிர்த தன்மையான இடங்களும் புதர்களும் மிகவும் பிடித்தமானவை. மேலும் குறிப்பிட்ட சில செடிகள் பாம்புகளை அதிகமாக ஈர்க்கின்றது.
இவ்வாறான செடிகள் அல்லது மரங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறான தாவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அந்தவகையில் சில தாவரங்கள் பாம்புகளை ஈர்க்கின்றன.
உங்கள் வீட்டின் சுற்றுப்புறத்தில் வாசனை நிறைந்த செடிகள், பூக்கள் இருந்தால் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று பூச்சியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
எலுமிச்சை மரம்
எலுமிச்சை மரம் வீட்டில் இருந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த புளிப்பு பழத்தை பூச்சிகள், கொறித்துண்ணிகள் மற்றும் பறவைகள் உண்ணும். அதனால் இந்த பூச்சுகள் மற்றும் பறவைகளை சாப்பிடுவதற்கான பாம்புகள் இந்த மரத்தை தேடி வருகின்றன.
தேவதாரு மரம்
இந்த மரங்கள் பெரும்பாலும் காடுகளிலேயே அதிகமாக வளர்கின்றது. இந்த மரங்கள் உயரமாக வளரக்கூடியவை.
இவை அடர்த்தியாக இருப்பதால், இங்கு குளிர்ச்சியான சூழல் காணப்படும். இதன் காரணமாக இந்த மரத்தை நோக்கி பாம்புகள் ஈர்க்கப்படுகின்றன.
க்ளோவர் செடி
இந்த தாவரங்கள் உயரமாக வளர்வதில்லை இருப்பினும் குட்டையாகவும் அடர்த்தியாகவும் இருப்பதால் இந்த செடியின் அடியில் பாம்புகள் வாழ்வதற்கு உகந்த சூழல் காணப்படுகின்றது.
சைப்ரஸ் செடி
உங்கள் வீடு, முற்றம் அல்லது தோட்டத்தை சுற்றி சைப்ரஸ் செடி இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகவும் அடர்த்தியாக வளரக்கூடிய இந்த தாவரங்கள் பாம்புகளை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன.
மல்லிகை செடி
வீட்டை நறுமணத்துடன் வைத்திருக்க,மகிழ்ச்சியையும், நேர்மறையையும் கொண்டு வர, மல்லிகை செடியை பொதுவாக வீட்டில் வைத்திருப்பார்கள்.
ஆனால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் இந்த தாவரத்தின் கீழ் பாம்புகள் வாழ்வதற்கு விரும்புகின்றன. இந்த தாவரம் பாம்புகளை அதிகமாக ஈர்க்கும் தன்மை கொண்டவை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |