சுண்டி இழுக்கும் சுவையில் மட்டன் கஞ்சி.. எப்படி செய்றாங்க தெரியுமா? ஈஸியான ரெசிபி!
பொதுவாக நாம் நோன்பு காலப்பகுதியில் அதிகமான வகைகளில் கஞ்சி செய்து சாப்பிடுவோம்.
இது போன்ற கஞ்சிகள் எடுத்து கொள்வதால் பசியின்மை, சாப்பிட முடியாமல் இருப்பவர்கள், நோயாளிகள் என அனைவரும் இலகுவாக சாப்பிடும் அளவிற்கு இந்த கஞ்சிகள் இருக்கும்.
அந்த வகையில் நோன்பு காலங்களில் அதிகமான ஊட்டச்சத்துக்களை அள்ளி குவிக்கும் மாட்டன் கஞ்சி எப்படி செய்வது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- அரிசி - 2 கப்
- வறுத்த சிறு பருப்பு - 1 கப்
- எலும்பில்லாத மட்டன் - அரை கிலோ
- பெ.வெங்காயம் - 3 (நறுக்கவும்)
- கேரட் - 4 (நறுக்கவும்)
- உருளைக்கிழங்கு - 2 (நறுக்கவும்)
- பட்டாணி - சிறிதளவு
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- மசாலா தூள் - தேவைக்கு
- மிளகாய் தூள் - தேவையான அளவு
- தக்காளி - 4 (நறுக்கவும்)
- பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
- இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
தயாரிப்பு முறை
முதலில் கஞ்சிற்கு தேவையான அரிசியை எடுத்து அதனை சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
பின்னர் குக்கருக்குள் மட்டன், மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக தண்ணீர் ஊற்றி மட்டனை வேக வைக்க வேண்டும்.
மட்டன் வெந்தவுடன் அதில் கழுவி வைத்திருக்கும் அரிசி, பருப்பு என இரண்டையும் போட்டு நன்றாக வேக வைத்து விட்டு அதனை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அந்த கலவையை எடுத்து வைத்த பின்னர், ஒரு வாணலியை எடுத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி கொண்டு மெது மெதுவாக அரைத்து வைத்த கஞ்சை சேர்க்கவும்.
சேர்த்தவுடன் கஞ்சி இன்னும் கெட்டியாக வேண்டும் என்றால் அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி கொள்ளலாம். தற்போது நாம் மட்டன் கஞ்சி தயார்!