மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல் ! அசைவ பிரியர்களே இனி சுடச் சுட ருசிக்கலாம்
பொதுவாக எல்லோருக்கும் மட்டனால் செய்யப்பட்ட உணவுகள் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் மட்டனை பயன்படுத்தி மட்டன் சுக்கா, மட்டன் கறி, மட்டன் பிரட்டல், சூப் என பல வகையான உணவுகளை தயாரிக்கலாம்.
அந்த வகையில் மட்டனை பயன்படுத்தி மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல் எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- மட்டன் எலும்பு - முக்கால் கிலோ
- வெங்காயம் - 250 கிராம்
- தக்காளி - 150 கிராம்
- இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் தூள் - ½ டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன்
- கருப்பு மிளகு தூள் - ½ டீஸ்பூன்
- தேங்காய் பால் - அரை கப் கெட்டியானது
- உப்பு - தேவைக்கேற்ப
தாளிப்புக்கான பொருட்கள்
- கடுகு - அரை டீஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் - 2
- எண்ணெய் - தேவையான அளவு
தயாரிப்பு முறை
கறிக்கு தேவையான தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்றாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் மட்டன் எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
தொடர்ந்து குறுக்கரில் மட்டன் எலும்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மட்டன் மூடும் வகையில் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரை வேக விடவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக எண்ணெயை பிரித்தெடுக்கும் வகையில் வதங்க விட வேண்டும். இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
வெங்காயத்துடன் மிளகாய் தூள், பெருஞ்சீரகம் தூள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து விட்டு மட்டன் எலும்பை வேக வைத்த நீருடன் சேர்க்கவும்.
தண்ணீர் வற்றும் வரை அடுப்பை மிதான தீயில் வைத்து கிளறிக்கொண்டே அதில் தேங்காய் பால் சேர்க்கவும்.
இதனை தொடர்ந்து தாளிப்புக்காக கொடுக்கப்பட்ட பொருட்களை போட்டு தாளித்து இறக்கவும்.
இப்போது சூப்பரான மதுரை ஸ்டைல் மட்டன் நல்லி எலும்பு வறுவல் தயார்!