மட்டன் தம் பிரியாணியை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! சுவை அள்ளும்
இன்று Eid Mubarak இதற்கு வீட்டில் கட்டாயம் பிரியாணி செய்வார்கள்.
அதுவும் மட்டன் பிரியாணி என்றால் எல்லோருக்கும் அவ்வளவு பிடிக்கும். பிரியாணி இல்லாமல் பண்டிகை இல்லை.

மட்டன் பிரியாணியை எப்போதும் போல செய்யாமல் அதை வித்தியாசமாக செய்வது நல்ல நறுமணமும் சுவையையும் அள்ளி கொடுக்கும்.
உங்கள் ஈத் விருந்தை மறக்க முடியாததாக மாற்ற விரும்பினால் இந்த மட்டன் பிரியாணியை ட்ரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள்
மட்டன் மற்றும் அரிசி: 1 கிலோ மட்டன் (எலும்புகளுடன்), 1 கிலோ பாஸ்மதி அரிசி (குறைந்தது 1 மணி நேரம் ஊறவைத்தது).
(மட்டன் ஸ்டாக்) செய்வதற்கு: 2 பெரிய வெங்காயம் (நறுக்கியது), 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 2 தேக்கரண்டி தனியா 1 பட்டை, 4-5 கிராம்பு, 2 கருப்பு ஏலக்காய், 1 தேக்கரண்டி உப்பு,2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது.
பிரியாணிக்கான முக்கிய மசாலாப் பொருட்கள்: 1 கப் தயிர், 2 டீஸ்பூன் மஞ்சள் மிளகாய்த் தூள் (அல்லது சிவப்பு மிளகாய்),1 டீஸ்பூன் கரம் மசாலா, 4-5 பச்சை மிளகாய்கள் (நடுவில் கீறியது), 1 கப் எண்ணெய் அல்லது சுத்தமான நெய்.
நறுமணத்தின் இரகசிய மசாலா: 1 தேக்கரண்டி ஜாதிக்காய் பூ, அன்னாசி பூ 5-6 பச்சை ஏலக்காய் (இவை அனைத்தையும் நன்றாக நசுக்கவும்).அலங்கரிப்பதற்கு: கேவ்ரா தண்ணீர், ஒரு சிட்டிகை ஆரஞ்சு நிறச் சாயம், வறுத்த வெங்காயம்

செய்முறை
- மட்டனை வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு மற்றும் மசாலாவுடன் 80% வேக வைத்து ஸ்டாக்கை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் சூடாக்கி முழு மசாலா மற்றும் பச்சை மிளகாயை வதக்கவும்.
- அதில் வேகவைத்த மட்டனை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தயிர் மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
- பின்னர் மட்டன் ஸ்டாக் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து தண்ணீர் பெரும்பாலும் வற்றும் வரை வேகவைக்கவும்.
- ஜாதிக்காய், ஏலக்காய் தூள், கேவ்ரா தண்ணீர் மற்றும் வறுத்த வெங்காயத்தை மேலே தூவவும்.
- பாத்திரத்தை இறுக்கமாக மூடி 15–20 நிமிடங்கள் தம் போடவும்.
- நறுமணமிக்க சுவையான மட்டன் தம் பிரியாணி தயார்.