200 நட்சத்திரங்களால் தமிழர்கள் வாழும் 25 நாடுகளில் வெளியிடப்பட்ட முட்டக்கண்ணி பாடல்
தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந் தேவா இசையில் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய 'முட்டக்கண்ணி' ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.
முட்டக்கண்ணி' ஆல்பம் பாடல்
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்தேவா இசையில் “ஐயோசாமி” பாடல் புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் ஜெர்மனியில் வாழும் இலங்கைப் பாடகர் முல்லைசசி குரலில் ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் காயத்ரிசான் நடிப்பில் முட்டக்கண்ணி அல்பம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
முட்டக்கண்ணி அல்பம் பாடல் கடந்த 1ஆம் திகதி தமிழர்கள் வாழும் 25 நாடுகளில் உள்ள 200 நட்சத்திரங்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
நடிகர் விஜய் சேதுபதி, விஜய் அன்டனி, ஆர்யா, சாம், பரத், சாந்தனு பாக்கியராஜ், ஜோன் விஜய், சினேகா, சங்கீதா உட்பட ஏராளமான தமிழ் சினிமா கலைஞர்களுடன்,
மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ எம்.சரவணன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் உட்பட 25 நாடுகளில் உள்ள 200 நட்சத்திரங்கள் இப்பாடலை வெளியிட்டு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆல்பம் பாடல் வெளியாகிய சில தினங்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் இணைத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |