துபாய் சென்றால் இந்த இடங்களை கட்டாயம் பாருங்க.. சுவாரஸ்யத்துடன் கூடிய விளக்கம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடாக துபாய் பார்க்கப்படுகின்றது.
நாள் தோறும் பல்லாயிரம் கணக்கான மக்கள் துபாயை சுற்றி பார்ப்பதற்காக மாத்திரம் வேறு நாடுகளிலிருந்து வருகிறார்களாம்.
துபாயில் வணிகம், சூரிய ஒளி, சாகச ஷாப்பிங் மற்றும் குடும்ப வேடிக்கைகள் ஆகிய காரணங்களால் மக்களை இன்று வரை ஈர்த்து வைத்திருக்கின்றது.
மேலும் மக்களை கவரும் வகையில் உலகின் மிக உயரமான கோபுரம், ஆடம்பரமான உணவகங்கள் மற்றும் தங்குவதற்கான ஹோட்டல்கள் என அட்டகாசமான இடங்கள் இருக்கின்றன.
அந்த வகையில் துபாய் சென்றால் மறக்காமல் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
1. புர்ஜ் கலீஃபா
துபாய் செல்லும் அனைத்து பயணிகளும் இந்த கட்டிடத்தை பார்க்காமல் வந்திருக்க மாட்டார்கள். இந்த கட்டிடம் 828 மீட்டர் (2,716.5 அடி), 200-க்கும் மேற்பட்ட மாடிகளை கொண்டுள்ளது.
பிரமாண்டமான உணவகங்கள் இங்கு காணப்படுகின்றது. திருமண நிகழ்வுகள், பார்ட்டிகள் இங்கு அதிகமாக இடம்பெறுகின்றன.
2. புர்ஜ் அல் அரபு
பார்ப்பதற்கு பாய் மர படகு போல் இருக்கும். ஆனால் இது ஒரு ஏழு நட்சத்திர ஹோட்டல்.
இங்கு 321 மீட்டர் உயரமும் 28 வது மாடியில் ஒரு ஹெலிபேட் மற்றும் நடுவானில் இடைநிறுத்தப்படும் ஒரு உணவகமும் இருக்கின்றது.
அத்துடன் ஹோட்டலில் பல்வேறு குளங்கள், ஒன்பது உணவகங்கள் மற்றும் பார்கள் மற்றும் நீர் பூங்கா உள்ளது. இது போன்ற ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. இதனால் தான் அதிகமான பயணிகள் இது போன்ற இடங்கள் அதிகமாக நடமாடுகிறார்கள்.
3. பாம் ஜுமேரா
துபாயில் இருக்கும் செயற்கை தீவாக இந்த இடம் பார்க்கப்படுகின்றது. பார்ப்பதற்கு கண்களுக்கு ரம்மியம் கொடுக்கும் அளவிற்கு அழகாக காட்சி தரும்.
இந்த தீவுகளில் ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹோட்டல்கள் முதல் ஆடம்பர கடற்கரை ஓய்வு விடுதிகள் வரை இருக்கின்றன. இந்த பாம் ஜுமேராவை சுற்றி வேகமாக படகில் பயணிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |