கோடிகளில் சம்பளம் வாங்கும் இமான்- சொத்து மதிப்பு எவ்வளவு பாருங்க
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் இமானின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இமான்
தமிழில் முதன் முதலாக நடிகர் விஜய்- பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான தமிழன் படத்தின மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் இமான்.
இவர், கடந்த 22 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். இமானின் இசையில் சுமாராக 100 படங்களுக்கு மேல் வெளியாகியுள்ளது.
அதில், அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் வரும், "கண்ணான கண்ணே" பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார். இமானின் வெற்றிக்கு கும்கி திரைப்படம் பெறும் பங்காற்றியது என்று கூறலாம்.
ஏனெனின் அதில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றது.
மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு கலைமாமணி விருதினைப் பெற்றுக் கொண்டார்.
இம்மானுவேல் வசந்த் தினகரன் என்ற பெயர் கொண்ட இமான் இசை மீது கொண்ட ஆர்வம் காரணமாக திரையுலகில் உச்ச இசையமைப்பாளராக வரும் வருகிறார். இவர் இன்றைய தினம் 42 ஆவது பிறந்த நாளை கொண்டாகிறார்.
சொத்து மதிப்பு விவரங்கள்
இந்த நிலையில், இமானின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், இமான் ஒரு படத்திற்கு இசையமைக்க 2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். அத்துடன் விளம்பரங்களுக்கும் இசையமைப்பதற்கு ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 9 முதல் 10 கோடிகள் வரை என கூறப்படுகின்றது.
இவரிடம் சுமாராக 55 கோடிகள் முதல் 60 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. பி.எம். டபள்யூ, ஆடி போன்ற கார்களும் வைத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இமானின் ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |