முத்துக்குமரன் வாங்கிய ட்ராபி தங்கத்தை விட மதிப்புள்ளதா? ரகசியத்தை உடைத்த பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளரான முத்துக்குமரன் தனக்கு வழங்கப்பட்ட ட்ராபியின் சிறப்பு அம்சம் குறித்து பேசியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டுாபர் மாதம் 6ம் தேதி ஆரம்பித்து கடந்த 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக முடிவுக்கு வந்துள்ளது.
இதில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், டைட்டில் வின்னராக முத்துக் குமரன் வந்துள்ளார். இரண்டாவது இடத்தை சௌந்தர்யா பிடித்துள்ளார்.
இந்த வெற்றியானது சாமானிய மக்களின் வெற்றியாக பேசப்பட்டு வரும் நிலையில், ரசிகர்களும் இந்த சீசனை புகழ்ந்து பேசி வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த சீசனில் சில விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெற்றியாளருக்கு கொடுக்கப்பட்ட ட்ராபியைக் குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது இதுவரை கொடுக்கப்பட்ட ட்ராபிகளை விட இது வித்தியாசமாக இருந்துள்ளது. இதனை விஜய் சேதுபதி அறிமுகப்படுத்திய போது மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகியது.
சிறப்புகள் என்ன?
குறித்த ட்ராபி குறித்து முத்துக்குமரன் கூறுகையில், பிக் பாஸ் ட்ராபியை முதல் முதலில் நான் பைனல் மேடைக்கு வருவதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்து பார்த்தேன்.
ஆனால் தூரமாக இருந்தது. அப்பொழுது அது தங்கமா? வெள்ளியா? என்றெல்லாம் தனக்கு தெரியாது... மக்களின் அங்கீகாரம் என்று தான் தெரிந்தது.
தனக்கு வழங்கப்பட்ட ட்ராபி மிகவும் அழகாக இருந்தது. இதுவரை நடைபெற்ற சீசன் வெற்றியாளருக்கு தங்க முலாம் அல்லது முலாம் பூசப்பட்ட ட்ராபி கொடுக்கப்பட்டிருந்தது.
தனக்கு கொடுக்கப்பட்ட ட்ராபி கல்லால் செய்யப்பட்டது. மிகவும் அழகாக செதுக்கி இருந்தார்கள். ஒரே மலையை குடைந்து செய்யப்பட்ட குடவரை கோவிலைப் போன்று, இந்த ட்ராபியும் ஒரே கல்லால் செய்யப்பட்டிருந்தது.
நம்முடைய பாரம்பரியத்தின் படி கற்களில் சிற்பம் மிகவும் அழகானது. இவை நமது ஊரில் மட்டுமே உள்ளது. இதனை கற்களால் செதுக்குவது மிகவும் கடினமாகும்.
வெளிநாட்டவர்களே வந்து அந்த கலை சிற்பங்களை ரசிக்கிறார்கள். அப்படி பாரம்பரியத்தோடு பிக் பாஸ் ட்ராப்பி செய்யப்பட்டிருக்கிறது.
அந்த கோப்பையின் கணம் அதிகம் அதைத் தூக்கவே முடியாது. உண்மையில் தங்கம் முலாம் பூசி கொடுத்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இருந்திருக்குமா? என்பது தெரியாது.
நிஜமா சொல்றேன் இந்த 8 சீசன்களில் எனக்கு வழங்கப்பட்ட டிராபி தான் மிகவும் கலைத்துவமானது என்று முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |