இந்த புகைப்படத்தில் இருக்கும் கியூட் குழந்தை ஒரு முன்னணி இசையமைப்பாளர்.. யார் தெரியுமா?
சமிபகாலமாக பிரபலங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சினிமா பிரபலங்கள் என பார்க்கும் பொழுது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
அந்த வகையில், இசையமைப்பாளர், பாடகர், ஆஸ்கர் நாயகன் இப்படி பன்முக சாதனை படைத்தவர் தான் ஏ ஆர்.ரஹ்மான்.
இவர் மட்டுமல்ல இவரின் தந்தை ஒரு இசையமைப்பாளராக இருந்து மறைந்தவர் என்பதால் இவரை தொடர்ந்து ஏ ஆர்.ரஹ்மான் இசையில் அதிக நாட்டம் காட்ட ஆரம்பித்து விட்டார்.
மணிரத்தினத்தின் 'ரோஜா' படத்தில் தனது இசை மாயாஜாலத்தை தொடங்கிய ரஹ்மான் இன்று வரையிலும் தனது இசையால் மக்களை ஆட்டிப்படைக்கிறார்.
இவரை மிக சிறிய வயதிலேயே வெற்றியை ருசித்தவர் புகழின் உச்சத்தில் அமர்ந்திருப்பவர் இப்படி ஏகப்பட்ட அடைமொழிகளை பயன்படுத்தி ஏ ஆர்.ரஹ்மானை வர்ணிக்கலாம்.
சிறுவயது புகைப்படம்
இந்த நிலையில் இசை புயல் எ.ஆர். ரஹ்மானின் குழந்தை வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவில் புகழ் பெற்று விளங்கும் இவருக்கு உலகம் முழுவதும் பலக்கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அந்த வகையில் ரஹ்மானின் சிறுவயது புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “ சிறிய வயதில் ரஹ்மான் இவ்வளவு கியூட்டா?” என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |