முதல் பாடல் அனுபவம் இப்படி தான் இருந்தது: புன்னகையுடன் பேசிய பவதாரணி
பாடகி பவதாரணியின் முதல் பாடல் அனுபவம் பற்றி அவர் பேட்டியளித்த பழைய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பவதாரணி
தமிழ் சினிமாவிலுள்ள பிரபலமான பாடகிகளில் ஒருவர் பவதாரணி.
இவர் பாடகி, இசையமைப்பாளர் என இசையில் பல சாதனைகளை செய்துள்ளார்.
இப்படியொரு நிலையில், கடந்த வாரம் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பவதாரணியின் இசை பயணம் குறித்தான செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அனுபவ கதை
இந்த நிலையில் பவதாரணி இளையராஜா இசையில் தன்னுடைய முதல் பாடல் அனுபவத்தை பகிர்ந்த வீடியோக்காட்சியொன்று பகிரப்பட்டுள்ளது.
அதில், “ நான் அப்பாவின் இசையில் பாடும் போது அவரிடம் திட்டு வாங்கிக் கொண்டு தான் பாடினேன். அவருடைய உதவியாளர் எனக்கு உதவி செய்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறுவயதிலேயே தன்னுடைய அண்ணன் மற்றும் தம்பியுடன் இணைந்து பாடல்களை விளையாட்டாக கம்போஸ் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்கு தேசிய விருது கிடைத்தபோது, அதிகமான பாராட்டுக்கள் அப்பாவிற்குதான் கிடைத்தது...” இப்படியாக அவருடைய அனுபவங்களை புன்னகையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |