காளான் வாங்குனா இப்படி வறுவல் செய்து பாருங்க... சுவை அட்டகாசமா இருக்கும்
காளான் வறுவல் மிகவும் வித்தியாசமான முறையில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காளான் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இதனை பல விதங்களில் சமைத்து சாப்பிடுவார்கள்.
எண்ணற்ற சத்துக்களைக் கொண்டுள்ள காளானை சற்று வித்தியாசமான முறையில் வறுவல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
காளான் - 1 பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
வரமிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
செய்முறை
காளான் வறுவல் செய்வதற்கு முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் விடவும். பின்பு சீரகம், வரமிளகாய்ஈ இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவற்றினை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு காளானை சேர்த்து நன்கு வதக்கியதுடன், சிறிதளவு தண்ணீர், கரம் மசாலா சேர்த்து, கொதிக்க விடவும்.
இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும.