இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் கறி செய்வது எப்படி?
பொதுவாகவே அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் இவ்வுலகில் அதிகம். ஆனால் சைவ உணவை சாப்பிடுபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
அசைவ உணவு என்றாலே இறைச்சி தான். ஆனால் சைவ உணவு சாப்பிடும் சிலர் இறைச்சியை ருசித்து பார்த்து இருக்க மாட்டார்கள்.
அந்தவகையில் இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் கறி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காளான் - 600 கிராம்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை 1
கிராம்பு 2
ஏலக்காய் 2
ஜீரா - 1தேக்கரண்டி
வெங்காயம் - 2
நறுக்கியது பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி விழுது - 6 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரக தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
கஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர் - 1 1/2 கப்
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
செய்முறை
காளானை நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஷாஹி ஜீரா சேர்க்கவும்.
அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 2 நிமிடத்திற்கு பிறகு தக்காளி விழுது சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
அடுத்து உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், கஷ்மீரி மிளகாய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்பு நறுக்கிய காளானை சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும். பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
அடுத்து கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து விட்டு 3 நிமிடம் வேகவிடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிகால் சுவையான காளான் கறி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |