மணக்க மணக்க மஷ்ரூம் பிரியாணி ஒரு தடவ இப்படி பண்ணுங்க ரெசிபி இதோ!
பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பிரியாணி சைவமாகவும் அசைவமாகவும் இரண்டு வகைகளாக உள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய காளான் பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாசுமதி அரிசி - 2 கப்
- காளான் - 1/2 கிலோ
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
- தேங்காய் பால் - 1/2 கப்
- தயிர் - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 2 ஸ்பூன்
- சோம்பு தூள் - 1/2 ஸ்பூன்
- பட்டை - 2
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 5
- பிரியாணி இலை - 1
- எண்ணெய் - தேவைக்கேற்ப
- நெய் - தேவைக்கேற்ப
- புதினா - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- தண்ணீர் - 3 கப்
- உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் அரிசியை கழுவி எடுத்து கொள்ள வேண்டும். இதை தேண்ணீர் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் காளானை நறுக்கி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொள்ள வேண்டும். இதற்கு பின்னர் தக்காளி சேர்த்து கெள்ள வேண்டும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் சோம்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வதக்கவும். பின்னர் தேங்காய் பால், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சமைக்கவும்.
இதற்கு பின்னர் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் 3 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொஞ்ச நேரம் வேக விட வேண்டும். இதன் பின்னர் காளான் பிரியாணி தயாராகி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |