காலையில் வெறும் வயிற்றில் இந்த சூப் குடிச்சா... நோய்கள் வர வாய்ப்பே இல்லை
வீதிகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.
முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. அந்த முருங்கை இலைகளைக் கொண்டு வெறும் வயிற்றில் சூப் செய்து குடித்தால் அத்தனை நோய்களும் பறந்து விடும்.
சூப் தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கப் முருங்கை இலையை எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு 2 கப் அரிசி ஊற வைத்த தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் முருங்கை இலைகளை சேர்த்து கொதிந்த பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் தேங்காய் பால், மிளகு, சீரகம் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும் ஒரு பாத்திரத்தில் லேசான எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து எடுத்தால் முருங்கை இலை சூப் தயார்.
முருங்கை இலை சூப்பின் நன்மைகள்
முருங்கை இலை சூப்பை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்
தொண்டை வலி குறையும்
சளி, இருமல் குறையும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
காலையில் வெறும் வயிற்றில் சூப் குடித்து வந்தால் கெட்ட கொழுப்புகள் நீங்கும்
மலட்டுத்தன்மை மற்றும் உடல் சோர்வு நீங்கும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |