தொடர்ந்து 7 நாட்கள் முருங்கை இலை ஜுஸ் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
வீதிகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.
முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.
முருங்கை இலைகளின் மருத்துவப் பலன்களை அறிந்து, பல நிறுவனங்களும் முருங்கை இலையை காய வைத்து, பொடித்து, முருங்கை இலை பொடி என பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
முருங்கை கீரையில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன அதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இது தீவாக அமைக்கிறது.
முருங்கையின் பலன்கள்
மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.
முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு.
முருங்கை இலையை காய வைத்து, பொடியாக்கி, காலை வேளையில், தேநீரில் கலந்து முருங்கை இலை டீயாக குடித்து வரலாம். முருங்கை இலைப் பொடியானது, தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முருங்கை இலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செறிந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு டீ அல்லது காப்பியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், இரத்த சக்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
எடை குறைப்பை முருங்கை இலைத்தேநீர் ஊக்குவிக்கிறது. முருங்கை இலையை உணவில் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் போது, அவற்றில் உள்ள சத்துகள் உடலில் கொழுப்பு சேமிப்பை குறைத்து, ஆற்றல் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்துகளை மிகுதியாக கொண்டவை. முருங்கை இலைச் சாற்றில் ஐசோதியோசயனேட் மற்றும் நியாசிமினின் ஆகியவை உள்ளதால், அவை இதயத் தமனிகள் தடிமனாக இருப்பதைத் தடுக்க உதவுகிறது.
இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. முருங்கையில் விட்டமின் சி இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு காரணமாகிறது.
முருங்கை இலை ஜுஸ்
முருங்கை இலை ஜுஸ் பறித்த முருங்கை இலைகளை நன்றாக கழுவி ஒரு கைப்பிடி அளவிற்கு கொழுந்து முருங்கைகளை தனியாக எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
தோல் நீக்கிய சிறிய இஞ்சித் துண்டையும் ஒரு டம்பள் நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
தினமும் காலை உணவுக்கு அரை மணிநேரத்திற்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ இந்த பானத்தை குடிக்கலாம். வாரம் ஒரு முறை விடுமுறை விட்டு குடிக்கலாம்.