நீரிழிவு நோயாளிகளுக்கு அரும்மருந்தாகும் முருங்கைக்கீரை பூரி: எப்படி செய்வது?
முருங்கை கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் செறிந்து காணப்படுகின்றன. இது நம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் உதவுகின்றது.இது நீரிழிவு நோயாளிகளுக்கு அரும்மருந்தாகும்.
முருங்கைக்கீரை எலும்புகளை பலப்படுத்துவதுடன் கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கைக்கீரை வைத்து அட்டகாசமான சுவையில் எப்படி பூரி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு...
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய்
முருங்கைக்கீரை - 1/2 கைப்பிடி அளவு
பூரிக்கு...
கோதுமை மாவு - 2 கப்
எண்ணெய் - 2 தே. கரண்டி
ஓமம் - 1/2 தே. கரண்டி
உப்பு - சுவைகேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் முருங்கைக்கீரையை ஆகியவற்றை மிக்சர் ஜாரில் போட்டு அதில் சிறிது நீரை ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, 2 தே.கரண்டி எண்ணெய்,1/2 டீஸ்பூன் ஓமம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பூரி மாவு பதத்திற்கு நன்றாக பிசைய வேண்டும்.
பின்னர் அந்த மாவை 10 நிமிடம் மூடி ஊறவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ளதை மாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், ஆரோக்கியம் நிறைந்த முருங்கைக்கீரை பூரி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |