மது போதையில் இரவில் கணவன் மனைவி செய்த செயல்! அதிகாலை காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்!
உணவு தராத ஆத்திரத்தால் மனைவியை கொன்றுவிட்டு அருகிலேயே கணவர் படுத்து உறங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் சுல்தான்பூரில் வசிப்பவர் வினோத் குமார் துபே(47). இவரது மனைவி சோனாலி. சம்பவ தினத்தின் போது இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர்.
இதன் பின்னர், மதுபோதையில் உச்சத்தில் இருந்த வினோத் மனைவியிடம் இரவு உணவு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு சோனாலி மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
போதையில் கொலை
இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் சோனால் கணவரை அறைந்துள்ளார்.
உடனே ஆத்திரமடைந்த கணவன் அவரை அடித்து, தலையணையை கொண்டு முகத்தில் அழுத்தி சோனாலியை கொலை செய்துள்ளார்.
ஆனால், அவர் இறந்தது தெரியாமல் உடல் அருகேயே வினோத் படுத்து தூங்கி இருக்கிறார். மறுநாள் எழுந்து பார்த்த பின் தான் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, ரூ.40 ஆயிரம் பணம், உடைகள் உள்ளிட்டவற்றை அள்ளி, பை ஒன்றில் போட்டு கொண்டு வேறிடத்திற்கு தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். பின் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பின் விசாரணையில் சோனாலி கொல்லப்பட்ட விவரங்களை அவர் போலீசிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.