தோல் நோய்களுக்கு பயன்படும் Mupirocin Ointment பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் Mupirocin Ointment சிரங்கு, படை, சிறிய காயங்கள் உட்பட தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.
பக்கவிளைவுகள்
- தோல் எரிவது போன்ற உணர்வு
- அரிப்பு
- வயிற்றுப்போக்கு
- வயிற்று தசைகள் இறுக்கம்
இதுதவிர Mupirocinல் உள்ள மூலப்பொருட்களில் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
சிறுநீரக நோயாளியாக இருந்தாலோ, ஏதேனும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தொடர்ச்சியாக உட்கொண்டாலே மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
கர்ப்பிணிகள் அல்லது கர்ப்பம் தரிப்பதற்கு திட்டமிடும் பெண்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும்.
இந்த மருந்தை பயன்படுத்தும் முன் பாதிக்கப்பட்ட இடத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் பயன்படுத்தவும், ஒருநாளைக்கு அதிகபட்சம் 3 முறை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முன்னரும், பயன்படுத்திய பின்னரும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிவிடவும்.
எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் பயன்படுத்துவது ஆபத்தான ஒன்றே.