Bigg Boss 10: முனியம்மா எழுதிய கடிதம்! கண்கலங்கிய பிக்பாஸ் வீடு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரொமோவில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் தங்களுக்குள் கடிதம் ஒன்றினை எழுதி கண்கலங்க வைத்துள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல சுவாரசியங்கள் அரங்கேறிவரும் நிலையில், தற்போது நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க் நடைபெற்று வருகின்றது.
முனியம்மாளின் விளையாட்டு அனைத்து போட்டியாளர்களையும் சிலிர்க்க வைத்தது. தற்போது வீட்டில் எதிர்கட்டி தலைவராக இருக்கும் முனியம்மா பேச்சும் அனைவரையும் கவர்ந்து வருகின்றது.

இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் தங்களுக்கு உறவாக கிடைத்த போட்டியாளர்களுக்கு கடிதம் எழுதி அதனை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் முனியம்மா, தம்பி அன்சருக்கு அக்கா என்ற உறவில் கடிதம் எழுதியுள்ளார். இவர் எழுதிய கடிதத்தினை அன்சர் படிக்கும் போது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கண்கலங்கியுள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |