இப்படி ஒரு பிரசாதமா! மஞ்ச் முருகன் கோவில் வரலாறு தெரியுமா? வியக்க வைக்கும் பின்னணி
7000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து மதத்துக்கு உலகம் முழுவதும் கோவில்கள் காணப்படுகின்றது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்து மதத்தில் பெரும்பாலான இந்து கடவுள்கள் ஏதோ ஒரு விருப்பமான உணவுடன் தொடர்புடையவர்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

குறிப்பாக அய்யப்பன் நெய்யை விரும்புவார், கிருஷ்ணர் வெண்ணெய், கணேஷ் லட்டு, மற்றும் சில பிரபல கோவில்களில் தனித்துவமான பிரசாதங்களும் சிறப்பு பெயர் பெற்றவை என்றால் மிகையாகாது.
அந்தவகையில், திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், ஸ்ரீரங்கம் அக்கார வடிசல் போன்றவை உலகம் முழுக்க பிரபலமானவை. அதுமாத்திரமன்றி பல கோவில்களில் சர்க்கரைப் பொங்கல்,புளி சாதம் போன்றவையும் பிரபலமானவையாக அறியப்படுகின்றது.

ஆனால் தமிழ் கடவுள் என்று பெயர் பெற்ற முருகப் பெருமான் ஆலயத்தில் சாக்லேட் தான் பிரசாதம் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் ஒரு சிறுவனின் செயல் காரணமாக, ஆலப்புழாவின் பாலமுருகன் கோவிலில் சாக்லேட்டு தான் பிரபலம்.குறிப்பாக மன்ச் சாக்லேட்.
இந்த கோவில் எங்கு உள்ளது?
ஆலப்புழா கொச்சியிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பிரபலமான நகரமாகும். மன்ச் முருகன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சுப்பிரமணிய கோயில், தலவாடியின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஆலப்புழா நகரில் அமைந்துள்ளது.

இந்த கோவிலுக்கு சென்றால் நீங்கள் அசாதாரணமான ஒன்றை பார்க்கலாம், மற்ற இந்திய கோவில்களைப் போல, கோவிலுக்கு வெளியே பூக்கள், மாலைகள், தேங்காய் மற்றும் பிற பூஜைப் பொருட்களை விற்கும் கடைகள் இங்கு மிகவும் குறைவாகவே இருக்கும். அங்கு, முருகனுக்குப் படைக்க Munch சாக்லேட் பார் மாலைகள் தயாராக இருக்கும்.
ஏன் அப்படி செய்கிறார்கள்?
2008 ஆம் ஆண்டு ஒரு இஸ்லாமியக் குடும்பம் இந்த கோவிலுக்கு அருகில் வசித்து வந்தது. அவர்களுக்கு ஒரு குறும்புக்காரக் குழந்தை இருந்தது.

ஒரு நாள் அந்த குழந்தை கோவில் வளாகத்திற்குள் நுழைந்தது. கோவிலில் உள்ள அனைத்து மணிகளையும் அடித்த பிறகு, அது கார்த்திகேயரின் கருவறைக்குள் நுழைந்தது.
இதை கண்ட அவரது பெற்றோர் அந்த குழந்தையை திட்டி அடித்து அங்கியிருந்து அழைத்து சென்றுவிட்டார்களாம். ஆகால் அன்று இரவே அந்த குழந்தை நோய்வாய்ப்பட்டு இரவு முழுவதும் முருகனின் பெயரை மீண்டும் மீண்டும் முணுமுணுத்ததுக்கொண்டே இருந்துள்ளது.
இதனை அவதானித்த பெற்றோர் மறுநாள் பயத்தில் குழந்தையை கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பூக்கள், சந்தனம், கற்பூரம் மற்றும் வேறு சில பொருட்களை இறைவனுக்கு காணிக்கையாகவும்,தங்கள் மகனை சமாதானப்படுத்த Munch சாக்லேட் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர்.

விடாமல் அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தை முருகனின் சிலைக்கு அருகில் சென்று தன் கையிலிருந்த சாக்லேட்டை பிரசாதமாக வைத்ததும் உடனே தனது அழுகையை நிறுத்தியது.
மேலும் சில நாட்களுக்குள், குழந்தையின் உடல்நிலை ஆச்சரியப்படுத்தும் வகையில் சீராக ஆரம்பித்துள்ளது. இந்த அசாதாரண சம்பவம் காட்டுத்தீயாய் பரவியதால் அன்றில் இருந்து, உள்ளூர் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் முருகனுக்கு Munch சாக்லெட்டை பிரசாதமாக வழங்கத் ஆரம்பித்துள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |