கொரோனா உடையை போட்டு கஷ்டப்படும் மருத்துவர்களுக்காக.. குளுமையான கருவி கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்த நிலையில், பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இதையடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் முழு உடல் கவசத்தை பயன்படுத்துவதால், கடுமையான வெப்பம், வியர்வையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதை சரிசெய்யும் வகையில் கோவ்-டெக் என்ற காற்றை உள்செலுத்தும் கருவியை மும்பையை சேர்ந்த மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ் கண்டுபிடித்துள்ளார்.
2-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவரான அவர், முழு உடல் கவசம் அணியும் போதும், மின் விசிறியின் கீழ் அமரும் உணர்ச்சியை கோவ்-டெக் கருவி வழங்கும். சுற்றுப்புற காற்றை உள்ளிழுத்து, அதை வடிகட்டி, தூய்மையான காற்றை முழு உடல் கவசத்தின் உள்ளே இந்த கருவி செலுத்தும் என்று கூறுகிறார்.
மேலும், தனது தாய் டாக்டர் பூனம் கவுர் ஆதர்ஷ், முழு உடல் கவசத்தை அணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து, இதர மருத்துவ பணியாளர்களுக்கு உதவும் நோக்கத்தோடு இந்த கண்டுபிடிப்டித்துள்ளார்.
ரூ.5,499 விலையில் விற்பனை செய்யப்படும் இந்தக் கருவி, புனேவில் உள்ள 2 ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, 30-40 கருவிகள் சோதனை முயற்சியில் ஆஸ்பத்திரிகளுக்கும், அரசுசாரா அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
#Healthcare Workers get 'cool' #PPE Kits
— PIB in Maharashtra ?? (@PIBMumbai) May 23, 2021
'Cov-Tech Ventilation System' is like sitting under the fan while you are inside the PPE
- Nihaal Singh Adarsh, a 19-year old
student innovator from #Mumbai
Read how his mother's struggle inspired him ?https://t.co/JfxoAiuahI pic.twitter.com/9Z6zulj0h4