viral video: சிறுவனை கடித்து குதறிய பிட்புல் நாய்... சிரித்து ரசித்துக் கொண்டிருந்த உரிமையாளர்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிறுவன் மீது மிகவும் ஆபத்தான பிட்புல் நாயை ஏவிவிட்டு உரிமையாளர் கடிக்கவிட்ட சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றது.
மும்பையில் மன்குர்த்(Mankhurd ) பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அங்குள்ள பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவினுள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தனது மூர்க்கத்தனமான பிட்புல் நாயை ஏவி சிறுவனை சிறுவனை பயமுறுத்தும் நோக்கில் கடிக்கவிட்டு ரசித்துள்ளார்.
இந்நிலையில், சிறுவனின் கன்னத்தை கடித்துக் குதறிய நாய் அவரது சட்டையை கவ்விப்பிடித்தது. இதனால், பதறிப்போன சிறுவன் கதறி அழுதார்.
ஆனால், நாயின் உரிமையாளர் சிறுவனை காப்பாற்ற உதவி செய்யாமல் சிறுவனின் கதறலை சிரித்துக்கொண்டே பார்த்து ரசித்தார்.
சிறுவன் மீது இப்படி நாயை ஏவிவிட்டு கடிக்க வைத்து ரசித்த நபர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த காணொளி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என பலரும் கமெண்ட்டுகளை பதிவு செய்துவருகின்றனர்.
🚨 SHOCKING & SHAMEFUL
— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 20, 2025
Mankhurd, Mumbai: 'Peaceful' Sohail Khan deliberately used his pet pitbull to ATTACK an innocent child sitting inside an auto 💔 pic.twitter.com/nP9aJWQQkt
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
